AIMAN College of Arts & Science for Women

Muballigha Convocation

The College’s greatest attraction is the Muballigha course. This year we have a total strength of 542 students. 1st Year 218, IInd Year 171, and IIIrd year 153 students. The Muballigha convocation held on 4th December 2016. It was presided over by Haji.Usman Sahib, Head, Muslim Literary Association, Keezakarai, Town Haji Kader Buksh Husain, AIMAN Management Committee Member Kazi.Abdul Wahab Sahib, Alhaj.U.Abdul Majeeth Sahib, Addressed the gathering.

முபல்லிகா பட்டமளிப்பு விழா

அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் கலை அரங்கில் முபல்லிகா பட்டமளிப்பு விழா 04.12.2016 அன்று முற்பகல் 10 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் முனைவர். எம்.எம்.சாகுல் ஹமீது சாஹிப் அவர்கள் வரவேற்புரை மற்றும் அறிமுகவுரை வழங்கினார். அவர்தம் அறிமுகவுரையில் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும் வாழ்க்கையை வளப்படுத்துவதும் தான் ஆலிமா பட்டம் என்று நவின்றார்.

டவுன் காஜி கீழக்கரை ஹாஜி.யு.ஆ.ஆ.காதர் பக்ஷ் ஹீசைன் சித்தீக்கி சாஹிப் அவர்கள் தம் தலைமையுரையில் மார்க்கசட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி வாழவேண்டும் என வலியுறுத்தினார். தலைவர் முஸ்லிம் இலக்கிய மன்றம் ஹாஜி னுச. ஆ.மு.ஆ. உஸ்மான் சாஹிப் அவர்கள் இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார்.

அய்மான் கல்வி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் காஜி யு. அப்துல் வாஹாப் சாஹீப் அவர்கள் ஓழக்கநெறியே வாழ்க்கையின் ஆதாரம் என்று தன் வாழ்த்துரையில் கூறினார். அல்ஹாஜ் யு.அப்துல் மஜீத் சாஹிப் அவர்கள் தம் வாழ்த்துரையில் அனைத்து மாணவிகளும் மார்க்கக் கல்வியைக் கட்டாயம் பயில வேண்டும்; என்று இயம்பினார். கல்லூரியின் முதல்வர் முனைவர்.வி.சுபத்ரா அவர்கள் தம் வாழ்த்துரையில் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி தாம் அறிந்துகொண்டவற்றை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தினார்.

காஜாமொய்தீன் சாஹீப் அவர்கள் ஈமான் கொண்டவர்களுக்கு மறுமை தான் மகிழ்ச்சி தரக்கூடியது என்று உரையாற்றினார்.கடலூர் மண்டலம் ருறேழு. நிஸ்வான் ஆய்வாளர் யு.சு.பஜ்லுத்தீன் காஷிஃபி ஹள்ரத் அவர்கள் தம் சிறப்புரையில் கல்வியின் ஆரம்பமும் முடிவும் எப்படி இருக்கவேண்டும் என்றும் அறிவு ஒழுக்கம் அன்பு அறன் இறைவன் அருளைப் பெறுதல் என்ற படிநிலைகளில் தான் கல்வியின் தரம் அமையவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ருறேழு வசரளவநந அப்துல் மஜித் வாபா அவர்தம்முரையில் இறைஅன்பை பெற வாழ்வில் செயலாற்ற வேண்டும். இறை அன்பினை கொண்டு அடையும் வெற்றியே உண்மையான வெற்றி அத்தகைய வெற்றியை அடைய மாணவிகளை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

நைனா முகமது கல்லூர்யின் முதல்வர்.முனைவர். கமர்ஜஹான் அவர்கள் பெண் கல்வி கற்பதற்கு எவர் ஒருவர் உறுதுணை புரிகிறாரோ அவர்க்கு சொர்க்கம் காத்திருக்கிறது என்று கூறினார். ஈரோடு மாவட்டம் அரசு காஜி பொறுப்பாசிரியர் தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன் அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபு கல்லூரி வேலூர் மௌலானா காஜி முஹம்மது கிஃபாயத்துல்லாஹ் அவர்கள் தம பேருரையில் நாம் மகிழ்ச்சி பெற வேண்டும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும் உலகிலேயே மன்னிக்க கூடிய நீதிமன்றம் தாய் மட்டும் தான் என்று அறிவுறுத்தினார். மௌலானா மௌலவி அப்சலுல் உலமா அவர்கள் ருறேழு நிஸ்வான் ஆய்வாளர் திருச்சி மண்டலம அஷ்ரப் அலி தாவுதி ஹள்ரத் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.